மாநில செய்திகள்

திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் + "||" + No worries about removing himself from DMK - Suspended MLA KK Selvam from DMK

திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்

திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்
திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வம் நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  

இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் இன்று சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மோடி, ஜே.பி.நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன்.  திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடவுள் முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” என்றார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விபி துரைசாமி, “ கு.க செல்வம் பாஜகவில் இணைய வில்லை. இந்தியாவில் பாஜக எப்படி காங்கிரஸ் குடும்ப கட்சியை எதிர்க்கிறதோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக குடும்ப கட்சியை தமிழக பாஜக எதிர்க்கும். திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
5. திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.