மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம் + "||" + The city of Chennai is recovering from corona damage

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம்
கொரோனா பாதிப்பில் இருந்த சென்னை மாநகரம் படிப்படியாக மீண்டு வருகிறது.
சென்னை: 

தமிழகத்திலலேயே கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட பகுதியாக தலைநகர் சென்னை உள்ள நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 1044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,004ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 112 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்! இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெருக்கள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது தடை செய்யப்பட தெருக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இதுவே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது. சென்னையில் மொத்தமாக 37, 537 தெருக்கள் உள்ளன. இதில் 9,509 தெருக்களில் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே அந்த தெருக்களை தடை செய்யப்பட பகுதியாக அறிவித்து முற்றிலும் பொதுமக்கள் வெளியே வராத படி மாநகராட்சியினர் கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது 5  நபர்களுக்கும் குறையாமல் கொரோனா பாதிப்பு இருக்கும் தெருக்களை தடை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக 813 தெருக்கள் தடை செய்யப்பட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியதால் தற்போது மாநகராட்சியில் 24 தெருக்கள் மட்டுமே தடை செய்யப்பட தெருக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுமார் 11 ஆயிரத்து 800 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...