பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை: பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - திமுக எம்.பி.,கனிமொழி


பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை: பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - திமுக எம்.பி.,கனிமொழி
x
தினத்தந்தி 16 Aug 2020 6:28 AM GMT (Updated: 2020-08-16T11:58:34+05:30)

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிரசவகால இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் பெண்ணின் சட்டப்படியான மண வயதை பதினெட்டிலிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கான பரிந்துரைகள் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி எம்.பி., டுவிட்டர் பதிவில்,

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story