தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Aug 2020 10:35 PM IST (Updated: 17 Aug 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதையடுத்து, 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை தொடங்கியது. 39 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின், கடந்த ஜனவரியில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
1 More update

Next Story