2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல - முதலமைச்சர் பழனிசாமி


2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Aug 2020 2:24 PM GMT (Updated: 2020-08-20T19:56:44+05:30)

2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி,

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாகவே 2 ஆம் தலைநகர் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையை 2 ஆம் தலைநகரமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அவருக்கு ஆதரவாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கருத்தை கூறியிருந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ திருச்சியை 2 ஆம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர்களின் அடுத்தடுத்த கருத்தால் 2-ஆம் தலைநகர் குறித்த விவாதங்கள் அதிகரித்தன. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இதுபற்றி அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இது பற்றி கூறும் போது,  “ 2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து என்றார். மேலும்,  இந்தி 3-வது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது எனவும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

Next Story