இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை: 2.கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்


இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை: 2.கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x
தினத்தந்தி 21 Aug 2020 4:10 AM GMT (Updated: 2020-08-21T09:40:56+05:30)

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமை வருவதாலும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 

இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2-கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

 போக்குவரத்து நெரிசல் அதிகமானதையடுத்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

Next Story