மத்திய அரசு பணிகளுக்கு தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்


மத்திய அரசு பணிகளுக்கு தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2020 1:30 AM IST (Updated: 23 Aug 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பணிகளுக்கு தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எதிர் காலத்தில் இந்த தேர்வு முகமை மாநில அரசு பணியாளர்களுக்கும், தனியார் துறையின் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற மத்திய மந்திரியின் அறிவிப்பானது மாநிலங்களின் தன்னாட்சி, இறையாண்மை உள்ளிட்டவற்றை நசுக்கும் நடவடிக்கையே ஆகும். இதன் மூலம் மாநில அரசுக்கும், தாய்மொழியில் பயின்ற மண்ணின் மக்களுக்கும் இடையேயான நிர்வாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு மொழி புரியாத அன்னியர் ஆதிக்கம் மாநில அரசின் நிர்வாகத் துறையிலும் மேலோங்கும்.

ஆகவே, மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் பறிக்கும் தேசிய தேர்வு முகமையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பினையும், அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
1 More update

Next Story