வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவை தொடக்கம் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுரை
வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவை தொடங்க உள்ளது தொடர்பாக, பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவை தொடங்க உள்ளது தொடர்பாக, பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், “ 7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் நலனைக்கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று வராமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 2, 2020
7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. pic.twitter.com/zwleDPzk1K
Related Tags :
Next Story