நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கேள்வி நேரம் ரத்து முடிவை திரும்பப்பெற வேண்டும் - மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “முன்பு எப்போதும் இல்லாத இந்த பெருந்தொற்று காலத்தின் மத்தியில், வெளிப்படையான தகவல்களை குடிமக்கள் அறிந்துகொள்ள கேள்வி நேரம் மிக முக்கியமானதாகிறது.
கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும். இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story