தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 84 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,449 ஆண்கள், 2,334 பெண்கள் என மொத்தம் 5,783 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 149 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 795 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 22 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 955 பேரும், கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 24 பேரும், பெரம்பலூரில் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 51 லட்சத்து 26 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 704 ஆண்களும், 1 லட்சத்து 83 ஆயிரத்து 747 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 877 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 60 ஆயிரத்து 619 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 58 பேரும், தனியார் மருத்துவமனையில் 30 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவை, கடலூரில் தலா 5 பேரும், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கலில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூரில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நெல்லை, விழுப்புரத்தில் தலா இருவரும், விருதுநகர், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, அரியலூரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.
இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 836 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 820 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,100 பேரும், சேலத்தில் 519 பேரும், கோவையில் 473 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 458 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 876 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 190 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 64 அரசு நிறுவனங்களும், 97 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story