உதவி போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமிஷனருக்கு, கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
காங்கிரஸ் மாவட்ட தலைவரை தாக்கிய உதவி போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனருக்கு, கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் பகுதியில் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை பலவந்தமாக அப்புறப்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதற்காக சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியனை தாக்கிய உதவி போலீஸ் கமிஷனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரது வரம்பு மீறிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை மாநகர காவல்துறை கமிஷனரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி வரம்பு மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை கமிஷனரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story