சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.கே.செல்வமணி சந்திப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஆர்.கே.செல்வமணி சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அருகில் இருந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பிரபாகர் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு அருந்ததியர் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் ஐ.வி.மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்டு வரும் உள்ஒதுக்கீட்டு முறை தொடரும் என்று அறிவித்தமைக்காகவும், சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வக்கீல்களை நியமனம் செய்ததற்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.

Related Tags :
Next Story