ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரை,
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2 பேரின் மீதான நடவடிக்கை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் சிபிஐ இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.
Related Tags :
Next Story