மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா தாக்கத்தால் முதன்முறையாக காணொலி மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளராக தேர்வான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த பேராசிரியர் அன்பழகன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று, திமுகவில் ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில், பொன்முடி, ஆ.ராசா ஆகியோரையும் நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Tags :
Next Story