திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு


திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2020 2:06 PM GMT (Updated: 10 Sep 2020 2:06 PM GMT)

திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கு.க.செல்வம். இவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 

அவரிடம் கட்சி தரப்பிலிருந்து விளக்கமும் கேட்கப்பட்டது. ஆனால் கு.க.செல்வம் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து கு.க.செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில் கட்சி சட்டதிட்டத்தின்படி, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தலைவருக்கு இல்லை. எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கு குறித்து திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story