கொரோனா தொற்று தொடர்பான புள்ளி விவரங்களில் முரண்பாடுகள் - கனிமொழி எம்.பி. புகார்


கொரோனா தொற்று தொடர்பான புள்ளி விவரங்களில் முரண்பாடுகள் - கனிமொழி எம்.பி. புகார்
x
தினத்தந்தி 11 Sept 2020 10:13 AM IST (Updated: 11 Sept 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கொரோனா தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி புகார் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக பத்திரிகையில் வெளியான செய்தியை இணைத்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார். மேலும் 236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று ஜூன் மாதத்தில் செய்தி வெளியானதாவும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 More update

Next Story