112-வது பிறந்தநாள்; அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவிக்கிறார்
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இது குறித்து சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் 15-ந்தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்கிறார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இது கொரோனா காலம் என்பதால், பெருங்கூட்டமாக கூட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story