மாநில செய்திகள்

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + An all-party meeting should be convened to discuss the new education policy - MK Stalin

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்தசூழலில் புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய அவர், “புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மாநில கல்வி உரிமையை பாதிப்பதாக புதிய கல்விக்கொள்கை இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும். குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் இந்த புதிய கல்விக் கொள்கை” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு - அரசாணை வெளியீடு
புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
2. புதிய கல்வி கொள்கையில் 8 வெளிநாட்டு மொழிகள்: இந்தியாவின் பன்மொழி திறன் அதிகரிக்கும்-நிபுணர்கள் கருத்து
புதிய கல்வி கொள்கையின்படி 8 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதால், இந்தியாவின் பன்மொழி திறன் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3. புதிய கல்வி கொள்கை விவகாரம் - ஆசிரியர்கள் கருத்தை கேட்கும் மத்திய அரசு
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
4. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்: முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
5. புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்