திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது - முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில்


திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது - முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 17 Sept 2020 4:06 PM IST (Updated: 17 Sept 2020 4:06 PM IST)
t-max-icont-min-icon

திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் திமுகவும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு திமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு, அதனை ஆதரித்தது அதிமுக அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அதிமுகவும், பாஜகவும்தான் காரணமே தவிர, திமுக அல்ல.

2010-ல் நீட் தேர்வு வரவில்லை, இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. அப்போதைய திமுக அரசு உயர்நீதிமன்றத்தை நாடி, தடையுத்தரவு வாங்கியது. திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது” என்று கூறியுள்ளார்.

Next Story