மாநில செய்திகள்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் + "||" + CBCID will inquire thatar madam youth killed case

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தட்டார்மடம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17 ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.   

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி,   கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு
தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசாரும் கைதாக வாய்ப்பு என தகவல்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 5 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
3. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் ஆஜர்
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
4. சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.
5. சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.