மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு + "||" + Mettur dam water level rises to 70 thousand cubic feet

மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று காலை 95.27 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 58.88 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,525 கனஅடியில் இருந்து 17,004 கனஅடியாக அதிகரித்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 10,318 கனஅடியில் இருந்து 8,160 கனஅடியாக குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,028 கனஅடியில் இருந்து 10,318 கனஅடியாக அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து 10,028 கன அடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,741 கன அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.