கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- மு.க ஸ்டாலின்


கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Oct 2020 12:05 PM IST (Updated: 2 Oct 2020 12:05 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின்  கூறியதாவது:

கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும். கிராம பிரச்சினைகளை தீர்க்க கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்? 

கொரோனாவை விட திமுகவை கண்டுதான் முதல்வர் அதிகம் அச்சப்படுகிறார்.  அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? எனக்கேள்வி எழுப்பினார். 


Next Story