தேசிய கொடி போன்ற கேக் வெட்டிய விவகாரம்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய தடை - ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய கொடி போன்ற கேக் வெட்டிய விவகாரத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப்பதிய வேண்டும் என்று கோவை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
சென்னை,
கோவையில் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை மதநல்லிணக்க நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் போன்றும், அசோக சக்கரத்துடன் கூடிய தேசிய கொடி போன்றும் உருவாக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டதாக கூறி, அந்த கேக்கை வெட்டிய அப்போதைய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் துணை கமிஷனர் பிரவேஷ்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோவை கோர்ட்டில் செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை கோர்ட்டு, உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ், ‘புகாரில் தெரிவிக்கப்பட்ட கலெக்டர், டி.ஐ.ஜி. ஆகியோர் பொது ஊழியர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவே கலந்து கொண்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை கோவை மாஜிஸ்திரேட்டு கவனத்தில் கொள்ளவில்லை. மத ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் தான் அவர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிய கோவை மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story