தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 85 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,417 ஆண்கள், 2,205 பெண்கள் என மொத்தம் 5,622 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 99 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 791 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,364 பேரும், கோவையில் 486 பேரும், செங்கல்பட்டில் 395 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 16 பேரும், பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 73 லட்சத்து 90 ஆயிரத்து 255 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 963 ஆண்களும், 2 லட்சத்து 43 ஆயிரத்து 513 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 94 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 79 ஆயிரத்து 322 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 41 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் என 65 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில் 21 பேரும், சேலத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், கோவை, திருவள்ளூரில் தலா 5 பேரும், காஞ்சீபுரம், திருப்பூரில் தலா 3 பேரும், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டில் தலா இருவரும், விருதுநகர், வேலூர், திருச்சி, திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கலில் தலா ஒருவரும் என 18 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 718 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 596 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,071 பேரும், கோவையில் 685 பேரும், தஞ்சாவூரில் 335 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 255 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 960 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 300 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 அரசு நிறுவனம், 123 தனியார் நிறுவனம் என மொத்தம் 189 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story