தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6¼ லட்சத்தை நெருங்கியது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6¼ லட்சத்தை நெருங்கியது. இதுவரை 80 ஆயிரம் முதியவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,322 ஆண்கள், 2,167 பெண்கள் என மொத்தம் 5,489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 131 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 802 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,348 பேரும், கோவையில் 474 பேரும், செங்கல்பட்டில் 381 பேரும், சேலத்தில் 357 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 74 லட்சத்து 74 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 285 ஆண்களும், 2 லட்சத்து 45 ஆயிரத்து 680 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 31 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 24 ஆயிரத்து 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 80 ஆயிரத்து 124 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேரும், கோவையில் 7 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், தென்காசி, திருவள்ளூர், திருச்சியில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், மதுரை, தேனி, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை 9,784 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 558 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,374 பேரும், தஞ்சாவூரில் 311 பேரும், சேலத்தில் 306 பேரும், கோவையில் 301 பேரும், அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 120 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 965 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 302 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story