மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + "||" + 5,185 people confirmed with corona infection in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,424 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 5,357 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,91,811 ஆக  அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 44,197 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 81.41 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 43.22 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. தமிழகத்தில் புகுந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு: இன்னமும் புரியாத புதிர்தான் ‘கொரோனா’
புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராகிக்கொண்டிருந்த வேளை அது. 2004-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கடல் கொந்தளிப்புடன் எழுந்து வந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதியை துவம்சம் செய்தது. ஏராளமான உயிர்களை சுருட்டிச் சென்றது. நாடே சோகத்தில் மூழ்கியது. நம்மைப்போன்று வேறு சில நாடுகளும் பேரழிவை சந்தித்தன.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.70 கோடியைக் கடந்தது
உலக அளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.70 கோடியைக் கடந்துள்ளது.
4. 562 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 500-ஐ கடந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 562 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் விசாரணை; தலைமைப்பதிவாளர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.