திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்


திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Oct 2020 5:48 PM IST (Updated: 12 Oct 2020 5:53 PM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.  இந்த சூழலில், திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் மேலும் கூறுகையில், “கற்பனைக் கருத்துகளால் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள், கலகலத்துப் போவார்கள். திமுக கூட்டணியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை” எனத்தெரிவித்துள்ளார். 

Next Story