மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,741 கன அடியாக குறைவு


மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,741 கன அடியாக குறைவு
x
தினத்தந்தி 14 Oct 2020 3:30 AM GMT (Updated: 14 Oct 2020 3:30 AM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 27,212 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.

நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.1 அடியாக உள்ளது. அணையில் தற்போது 64.85 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story