விருதுநகரில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா
விருதுநகரில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வர இருந்தார். ஆனால், அவரது தாயார் மறைவால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே நோய் தொற்று ஏற்பட்டுள்ள அந்த 18 பேருடன் பணியாற்றிய பிற ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story