மாநில செய்திகள்

நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் + "||" + Disability activists filed complaint against actress Khushboo

நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார்

நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார்
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை,

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகை குஷ்பு தான் தெரிவித்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அராஜகத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்- குஷ்பு டுவிட்
தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.
2. காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை;அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் - நடிகை குஷ்பு
காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
3. திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லா குஷ்புவின் 10 ஆண்டுகால அரசியல் பயணம்
திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... என குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
4. நடிகை குஷ்பு கண்ணில் திடீர் காயம்
நடிகை குஷ்பு கண்ணில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
5. 20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது - நடிகை குஷ்பு
20 பேரை மட்டும் வைத்து தொலைக்காட்சி படப்பிடிப்பை நடத்த இயலாது என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.