மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம் + "||" + Tamil Nadu is better than last year in passing the ‘NEET’ exam

‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம்

‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் எழுதினார்கள். இதில் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதமாக இருந்தது. அப்போது மாநில அளவில் 23-வது இடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது.


இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். கடந்த ஆண்டை விட குறைவானவர்கள் தேர்வை எழுதியிருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தேர்ச்சி பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடம் பிடித்த நாகலாந்து, இந்த ஆண்டும் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
2. டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்தது- ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சி
டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்ததாக ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
3. கல்வித்துறை பயிற்சி வகுப்பில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 1,615 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி
நீட் தேர்வில் கல்வித்துறை பயிற்சி வகுப்புகளில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
4. ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி
செஞ்சியில் ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
5. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.