தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,93,299 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர், காஞ்சிபுரத்தில் 99 பேர், திருவள்ளூரில் 170 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 285 பேர், திருப்பூரில் 155 பேர், சேலத்தில் 140 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 4,314 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,55,170 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 34,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 81,259 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.75 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story