தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு + "||" + Corona infection confirmed for 3,057 people in Tamil Nadu today - Health Department announcement
தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,30,250 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,262 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த ஓரிரு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 6,59,432 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 32,960 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தமிழகம் முழுவதும் 81,472 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 93,56,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.