அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தியை கேட்டு துயருற்றேன் - மு.க.ஸ்டாலின்
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தியை கேட்டு தான் துயருற்றதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு செய்தியை கேட்டு தான் துயருற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்!
மூன்றுமுறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016-ல் வேளாண்துறை அமைச்சராக பதிவியேற்றார். சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைச்சர்.
பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைபிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் எனது ஆறுதல்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story