அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி


அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2020 3:54 PM IST (Updated: 9 Nov 2020 3:54 PM IST)
t-max-icont-min-icon

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை, 

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? என்பதை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி நெல்லையை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story