சென்னை ரெயில்வே கோட்டத்தின் முன்பதிவு மையங்கள் இன்று மதியம் 2 மணி வரை செயல்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை ரெயில்வே கோட்டத்தின் முன்பதிவு மையங்கள் இன்று மதியம் 2 மணி வரை செயல்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2020 7:00 AM IST (Updated: 14 Nov 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரெயில்வே கோட்டத்தின் முன்பதிவு மையங்கள் இன்று மதியம் 2 மணி வரை செயல்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் பொதுப்போக்குவரத்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். அவ்வாறு பயணம் செய்யும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் டிக்கெட் முன்பதிவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story