மதுரை ஜவுளிக்கடையில் தீ விபத்து - 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு


மதுரை ஜவுளிக்கடையில் தீ விபத்து - 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 Nov 2020 7:52 AM IST (Updated: 14 Nov 2020 12:56 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று நள்ளிரவில் ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை,

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 தீயணப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், தீப்பிடித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடம் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story