சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ராயபேட்டை, தி-நகர், கிண்டி, அடையார், பெசண்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story