மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்


மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்
x
தினத்தந்தி 15 Nov 2020 3:21 AM GMT (Updated: 15 Nov 2020 3:21 AM GMT)

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.09 அடியாக உள்ளது.

மேட்டூர்,

மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.09 அடியாக உள்ளது. அணைக்கு தற்போது 6,497 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 64.97 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story