மாநில செய்திகள்

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல் + "||" + Rainfall for the next 24 hours in South Tamil Nadu - Meteorological Department

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள மற்றும் கர்நாடக கடற்பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.