தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 Dec 2020 6:48 PM IST (Updated: 6 Dec 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,90,240 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்ரு 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 3,875 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,788 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாள்இல் 70,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1,24,76,093 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story