சென்னை விமான நிலையத்தில் 147 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
பேண்டேஜில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 147 கிராம் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனையின் போது, சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் நபர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்ட போது, ஒரு நபரின் முதுகில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது, விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. அந்த நபரை அழைத்து அவரது முதுகில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேஜை நீக்கிய போது, அதில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நபரிடம் இருந்து மொத்தம் 147 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 7.5 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் சுமார் 7.23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 142 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story