டெல்லி போராட்டம்: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்


டெல்லி போராட்டம்:  விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Dec 2020 5:09 AM IST (Updated: 7 Dec 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சம்பந்தப்பட்ட மந்திரி, பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்க வரும் விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் தான் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் டெல்லியை சுற்றி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவசாயிகளின் பிரச்சினையில் கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது விவசாயிகள் பூமி, விவசாயிகளின் குறைகளை தீர்க்காமல் இந்தியா வல்லரசாக மாற முடியாது. இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும், விவசாயிகளும்தான். எனவே, விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story