விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும், 3 வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் - மு.க.ஸ்டாலின் டுவீட்
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும், 3 வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்பு இன்று நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும், 3 வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! .உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!. உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!. விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது!
— M.K.Stalin (@mkstalin) December 8, 2020
உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!
உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! https://t.co/0g02ymh6yr
Related Tags :
Next Story