தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Dec 2020 1:06 PM IST (Updated: 10 Dec 2020 1:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

சென்னை, 

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

"திமுக தலைவர் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி/தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக 'தமிழகம் மீட்போம்!' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

சிறப்பு பொதுக்கூட்டம் விவரம்:-

2020 டிசம்பர் 12 (சனி) - ராமநாதபுரம்

டிச. 14 (திங்கள்) - திண்டுக்கல்

டிச. 17 (வியாழன்) - கடலூர்

டிச. 19 (சனி) - திருவள்ளூர்

டிச. 23 (புதன்) - சிவகங்கை

டிச. 26 (சனி) - தஞ்சை

டிச. 28 (திங்கள்) - நாகை/ திருவாரூர்

டிச. 29 (செவ்வாய்) - திருவண்ணாமலை

டிச. 31 (வியாழன்) - அரியலூர்/பெரம்பலூர்".

இவ்வாறு திமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story