மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் - மு.க.ஸ்டாலின்
மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்தியா முழுவதும் விவசாயப் பெருங்குடி மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க் கொண்டு இருக்கிறது.
மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப்போகிறோம். மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்!#COVID19 காலத்தில் ஏழைகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்!
— M.K.Stalin (@mkstalin) December 10, 2020
உரிமைகள் பட்டப்பகலில் பறி போகின்றன.#HumanRightsDay-வை கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்?
மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்! pic.twitter.com/mAptazJEZe
Related Tags :
Next Story