எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன் - மு.க.ஸ்டாலின் விளக்கம்


எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன் - மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2020 11:33 AM IST (Updated: 11 Dec 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பொருட்களை வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நலக்குறைவு குறித்து கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்த  பரிசோதனை மேற்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுது நேரம் ஓய்வெடுத்தேன். மற்றபடி ஏதும் இல்லை. 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.



Next Story