மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 15 Dec 2020 10:01 AM IST (Updated: 15 Dec 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,072 கனஅடியில் இருந்து 5,142 கனஅடியாக குறைந்தது.

மேட்டூர்,

மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணியின் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,072 கனஅடியில் இருந்து 5,142 கனஅடியாக குறைந்தது.

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.9 அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 72.7 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story