சேலத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி


சேலத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 16 Dec 2020 6:10 PM IST (Updated: 16 Dec 2020 6:10 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்,

சேலம், 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அம்மா மினி கிளினிக்குள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் கடந்த 14ம் தேதி அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. 

முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறன. இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.  

இந்நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார் இந்த மினி கிளினிக் மூலம் சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற முடியும். 

முன்னதாக இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story