சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 21 Dec 2020 2:13 AM GMT (Updated: 21 Dec 2020 2:13 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் 14 நாள்களாக விலையில் மாற்றமில்லாதது வாகன ஓட்டிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எப்போது விலை இன்னும் குறையும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Next Story